/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கரும்பு வாகன டிரைவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு கரும்பு வாகன டிரைவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
கரும்பு வாகன டிரைவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
கரும்பு வாகன டிரைவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
கரும்பு வாகன டிரைவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 24, 2024 05:36 AM

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை சார்பில், கரும்பு வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
துணை பொது மேலாளர் சிவராமன், இணை மேலாளர் சோமசுந்தரம், துணை மேலாளர்கள் ராஜ்கமல், ஜமால் முகமது, பஞ்சாட்சரம் கலந்து கொண்டு பாதுகாப்பாக வாகனங்கள் இயக்குவது பற்றி விளக்கினர்.
கரும்பு ஏற்றி வரும் வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஆலை வளாகத்தில் அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுபட்டு வாகனத்தை இயக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதில், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, கண்டரக்கோட்டை, குறிஞ்சிபாடி, குள்ளஞ்சாவடி, விருத்தாசலம், அரியூர் பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.