/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறி விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறி
விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறி
விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறி
விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூலை 25, 2024 05:52 AM

நெய்வேலி: நெய்வேலியில் படிக்கும் மாணவ, மாணவியர் கால்பந்து, கைப்பந்து, சதுரங்கம், கூடைபந்து, நீச்சல் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு, விளையாட்டு பயிற்சி அளிப்பதில் என்.எல்.சி., நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி வருகிறது. இங்குள்ள விளையாட்டு மைதானங்களில் பயிற்சி பெற்றவர்கள், விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீட்டில் மத்திய மாநில. அரசுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 10 ல் உள்ள கால்பந்து மைதானம் பராமரிப்பின்றியும், பாதுகாப்பற்ற நிலையிலும் இருந்து வருகிறது. என்.எல்.சி., ஆர்வம் காட்டாததால், கால்பந்து மைதானத்தில் கோல்போஸ்ட் கூட மாணவர்களின் பெற்றோர் அமைத்து கொடுத்துள்ளனர்.
எனவே, என்.எல்.சி., நகர நிர்வாகம், விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்தும், மைதானத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.