/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஒலிம்பிக்கில் பங்கேற்க துடிக்கும் பண்ருட்டி கைப்பந்து வீரர் ஒலிம்பிக்கில் பங்கேற்க துடிக்கும் பண்ருட்டி கைப்பந்து வீரர்
ஒலிம்பிக்கில் பங்கேற்க துடிக்கும் பண்ருட்டி கைப்பந்து வீரர்
ஒலிம்பிக்கில் பங்கேற்க துடிக்கும் பண்ருட்டி கைப்பந்து வீரர்
ஒலிம்பிக்கில் பங்கேற்க துடிக்கும் பண்ருட்டி கைப்பந்து வீரர்
ADDED : ஜூலை 25, 2024 05:52 AM

கடலுார்; பண்ருட்டி தாலுகா, சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்,22; காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
டில்லியில் 2021ல் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக அணிக்காக விளையாடினார்.
இப்போட்டியில் தமிழ்நாடு அணி வெள்ளி பதக்கம் பெற்றது. கடந்த 2022ம் ஆண்டு பக்ரைனில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தென்னிந்திய அளவில் இவர் மட்டுமே தகுதி பெற்று பங்கேற்றார்.
கடந்த 2022ம் ஆண்டு ஆந்திராவில் தேசிய ஜூனியர் பிரிவு போட்டியிலும், உத்திரபிரதேசத்தில் தேசிய சீனியர் பிரிவு போட்டியிலும் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடினார்.
இதுகுறித்து அருணாசலம் கூறுகையில், 'பள்ளி படிப்பின் போது, கைப்பந்து போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லுாரிகளில் நடந்த கைப்பந்து போட்டியில் விளையாடினேன்.
இந்திய அணி சார்பில் ஆசிய அளவிலான மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது. இதற்காக பல்வேறு போட்டிகளில் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
பயிற்சியாளர் கார்த்திகேயன் ஊக்கமளித்து வருகிறார். 3 மூறை சிறந்த வீரருக்கான பரிசு பெற்றுள்ளேன்' என்றார்.