/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிடப்பில் சாலை பணி: கிராம மக்கள் அவதி கிடப்பில் சாலை பணி: கிராம மக்கள் அவதி
கிடப்பில் சாலை பணி: கிராம மக்கள் அவதி
கிடப்பில் சாலை பணி: கிராம மக்கள் அவதி
கிடப்பில் சாலை பணி: கிராம மக்கள் அவதி
ADDED : ஜூன் 06, 2024 03:04 AM

புவனகிரி: புவனகிரி அருகே பு.மணவெளி சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புவனகிரி அடுத்த ஆலம்பாடி மெயின் ரோாட்டில் இருந்து, பு.மணவெளி, பூதவராயன்பேட்டை வழியாக விருத்தாசலம் சாலையை இணைக்கும் வகையில் சாலை உள்ளது. இந்த சலையில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் இருந்தது. அப்பகுதியினர் கோரிக்கையின் பேரில் தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. சாலையை கொத்தி பழைய ஜல்லியை அப்படியே போட்டு சாலை அமைத்தனர்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர்.
இதனால் கடந்த 6 மாதங்களாக சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கும் சாலையில் பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பள்ளிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி சாலை பணியை துவங்கி விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.