/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காட்டுமன்னார்கோவிலில் ராகுல் பிறந்தநாள் விழா காட்டுமன்னார்கோவிலில் ராகுல் பிறந்தநாள் விழா
காட்டுமன்னார்கோவிலில் ராகுல் பிறந்தநாள் விழா
காட்டுமன்னார்கோவிலில் ராகுல் பிறந்தநாள் விழா
காட்டுமன்னார்கோவிலில் ராகுல் பிறந்தநாள் விழா
ADDED : ஜூன் 20, 2024 08:52 PM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் நாட்டார்மங்கலம் ராஜூவ்காந்தி தேசிய பள்ளியில், அகில இந்திய முன்னாள் காங்., தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காங்., மாநில துணைத்தலைவர் மணிரத்தினம், மாணவர்களுடன் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் இளைஞர் காங்., மாநில முன்னாள் பொதுச் செயலாளர் கமல் மணிரத்தினம், இளைஞர் காங்., பொதுச் செயலாளர் அரவிந்த் மணிரத்தினம், பள்ளி தாளாளர் சுதா மணிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, பள்ளி ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
தொடர்ந்து, காட்டுமன்னார்கோவில் வட்டார நகர காங்., சார்பில், கச்சேரி சாலையில் நடந்த விழாவில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். வட்டார தலைவர்கள் சங்கர், கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஷானு ஜாகிர் உசேன், நகர தலைவர் அன்வர், நிர்வாகிகள் பாபு ராஜன், பாண்டியன், தெம்மூர் செல்வம், ஜின்னா, பஷீர், தம்பியாபிள்ளை, குணசேகரன், தர்மலிங்கம், கிருபாகரன், ராஜன் சஜானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
லால்பேட்டை நகர தலைவர் இதாயத்துல்லா நன்றி கூறினார்.