/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குண்டர் சட்டத்தில் புதுச்சேரி ரவுடி கைது குண்டர் சட்டத்தில் புதுச்சேரி ரவுடி கைது
குண்டர் சட்டத்தில் புதுச்சேரி ரவுடி கைது
குண்டர் சட்டத்தில் புதுச்சேரி ரவுடி கைது
குண்டர் சட்டத்தில் புதுச்சேரி ரவுடி கைது
ADDED : ஜூன் 06, 2024 02:53 AM
கடலுார்: முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டபுதுச்சேரி ரவுடி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா வாழப்பட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெயபிரகாஷ், 28. இவர், கடந்த மாதம் 22ம் தேதி பண்ருட்டி அருகே எம்.புதுப்பாளையம், பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, 5 நபர்கள் வழிமறித்து முன்விரோதம் காரணமாக பட்டா கத்தியால் வெட்டி, கொலை செய்ய முயன்றனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் அடுத்த சாமியார்பேட்டையை சேர்ந்த பெருமாள் மகன் வினோத்குமார், 25. மற்றும் நுாதேஷ், சந்துரு, கிஷோர், குகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட வினோத்குமார் மீது வில்லியனுார் போலீசில் 2 அடிதடி வழக்குகள் உள்ளது.
இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய, கலெக்டருக்கு, எஸ்.பி., ராஜாராம்பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், வினோத்குமார் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.