நெசவாளர்களுக்கு உதவி தொகை வழங்கல்
நெசவாளர்களுக்கு உதவி தொகை வழங்கல்
நெசவாளர்களுக்கு உதவி தொகை வழங்கல்
ADDED : ஜூன் 25, 2024 05:31 AM

நடுவீரப்பட்டு, சென்னையில் நடந்த விழாவில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
மெட்ராஸ் பல்லவா ரோட்டரி சங்கம், தறி ஆடையகம் ஆகியன சார்பில், நெசவாளர்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி சங்கமாவட்ட கவுன்சிலர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கவர்னர் ரவிராமன், பல்லவா ரோட்டரி நிறுவன தலைவர் சிதம்பரம், நம்பி ஆருண் முன்னிலை வகித்தனர். தறி ஆடையக நிறுவனர் சண்முகம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நெசவு வேலையின்றி நலிவடைந்த நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குடியாத்தம், குன்றத்துார், சேலம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
மெட்ராஸ் பல்லவா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலர் ஞானசேகர், பொருளாளர் பால்ராஜ் மற்றும் கிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன், ராபர்ட், முன்னாள் தலைவர் ராமலிங்கம், குமரவேல், முன்னாள் இயக்குனர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.