/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.சி.சி., பயிற்சி முகாம் குரூப் கமாண்டர் ஆய்வு என்.சி.சி., பயிற்சி முகாம் குரூப் கமாண்டர் ஆய்வு
என்.சி.சி., பயிற்சி முகாம் குரூப் கமாண்டர் ஆய்வு
என்.சி.சி., பயிற்சி முகாம் குரூப் கமாண்டர் ஆய்வு
என்.சி.சி., பயிற்சி முகாம் குரூப் கமாண்டர் ஆய்வு
ADDED : ஜூன் 25, 2024 05:26 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் நடந்துவரும் என்.சி.சி., ஆண்டு பயிற்சி முகாமை, புதுச்சேரி குரூப் கமாண்டர் மேனன் ஆய்வு மேற்காண்டார்.
என்.சி.சி., 6 வது பட்டாலியன் படைப்பிரிவு சார்பில், என்.சி.சி., ஆண்டு பயிற்சி முகாம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் கடந்த 13ம்தேதி துவங்கி நடந்து வருகிறது.
கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சி முகாமை புதுச்சேரி குரூப் கமாண்டர் கர்னல் மேனன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கர்னல் ராவ், என்.சி.சி., மாணவர்களுடன் கலைந்துரையாடினார்.
வாழ்க்கை நெறிமுறைகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.