கூட்டுறவு சட்டப்பூர்வ நிதி வழங்கல்
கூட்டுறவு சட்டப்பூர்வ நிதி வழங்கல்
கூட்டுறவு சட்டப்பூர்வ நிதி வழங்கல்
ADDED : ஜூன் 24, 2024 05:52 AM

கடலுார் : மா.பொடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சட்டப்பூர்வ நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மா.பொடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2022-2023ம் ஆண்டுடிற்கான இலாப பிரிவினையில் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதிகளுக்கான தொகை ரூ. 1.71 லட்சத்திற்கான காசோலையை மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரனிடம், சங்க செயலாளர் தமிழரசன் வழங்கினார். விருத்தாசலம் சரக துணைப் பதிவாளர் சவிதா, சரக துணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் கலையரசன், கள அலுவலர் பிரகாஷ் உடனிருந்தனர்.