ADDED : ஜூலை 12, 2024 06:09 AM

மந்தாரக்குப்பம்: வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி அறக்கட்டளை சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு பீரோக்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரகாசன் வரவேற்றார். வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி அறக்கட்டளை சார்பில், புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளுக்கு பீரோக்களை அரிமா சங்க மாவட்ட தலைவர் ராஜமாரியப்பன், அரிமா முன்னாள் ஆளுநர் ரத்தினசபாபதி, ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். ஜெயின் ஜூவல்லரி சுரேஷ்சந்த், கமல் கிேஷார் ஜெயின், அரிமா சங்க நிர்வாகிகள் ஞானமூர்த்தி, கமலக்கண்ணன், பிரம்மநாயகம், மேத்தாவாணன், பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், மாலா உட்பட பலர் பங்கேற்றனர்.