/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
ADDED : ஜூலை 12, 2024 06:10 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நல்லுார் தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலர் சுப்பிரமணியன், காரைச்செழியன், ஒன்றிய ஜெ., பேரவை செயலர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மணிகண்ணன், சாந்தப்பன், வடகரை ராமலிங்கம், காந்தி, சந்திரசேகர், கபிலன், சுரேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பொது மக்கள் பலியான சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் நடக்கும் தொடர் படுகொலைகளை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, கடைகள் மற்றும் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.