ADDED : ஜூன் 20, 2024 03:45 AM
புவனகிரி : புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக போலீஸ் நிழற்குடை, அரசு பஸ் மோதி விழுந்ததில் பள்ளி மாணவியர் சிலர் காயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து புவனகிரி வழியாக சிதம்பரத்திற்கு நேற்று காலை அரசு பஸ் வந்தது. வெள்ளாற்றுப்பாலம் கடைவீதி வழியாக பஸ் வந்தபோது, அங்கு போலீசாருக்கு கீற்றுக்கொட்டகையில் அமைக்கப்பட்ட நிழற்குடையில் மோதியதில் கீழே விழுந்தது.
அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த அரசுப்பள்ளி மாணவியர்கள் சிலர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.