ADDED : ஜூலை 11, 2024 05:33 AM
நெய்வேலி, : நெய்வேலி அடுத்துள்ள மேலக்குப்பம் கிராமத்தில் மக்கள் வளர்ச்சியில் காவல்துறை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் சிறு சேமிப்பின் அவசியம் குறித்த முகாம் நடந்தது.
நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா கிராமத்தில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தெர்மல் போலீஸ் நிலையம் சார்பில் மேலக்குப்பம் கிராமத்தில் நாள்தோறும் கிராம மக்களின் விபரங்கள் சேகரித்தல், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் மருத்துவ முகாம் நடத்துவது, கல்வித்திறன் மற்றும் வேலை வாய்ப்புத்திறன் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.