/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியோர் கூடுதல் இழப்பீடு கோரி மனு என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியோர் கூடுதல் இழப்பீடு கோரி மனு
என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியோர் கூடுதல் இழப்பீடு கோரி மனு
என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியோர் கூடுதல் இழப்பீடு கோரி மனு
என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியோர் கூடுதல் இழப்பீடு கோரி மனு
ADDED : ஜூலை 25, 2024 06:19 AM

விருத்தாசலம்: என்.எல்.சி.,க்கு நிலம், வீடு மற்றும் மனை வழங்கிய விவசாயிகள், கூடுதல் இழப்பீடு கேட்டு விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கம்மாபுரம், கோபாலபுரம், முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்கள் என்.எல்.சி., நிர்வாகத்துக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தோம். கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் வேளாண் அமைச்சர், புவனகிரி எம்.எல்.ஏ., என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், 5 லட்சம், 6 லட்சம் வாங்கிய விவசாயிகளுக்கு, உயர் இழப்பீடு மற்றும் பணம் வாங்காமல் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும்.
முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மனை வழங்கியவர்களுக்கு சமமான இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அத்துமீறி கம்பி வேலி அமைக்க முயலும் என்.எல்.சி., நிர்வாகத்தை தடுத்து நிறுத்தி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கம்பிவேலி அமைக்க முயலும் என்.எல்.சி., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விருத்தாசலம் டி.எஸ்.பி.,யிடமும் மனு கொடுக்கப்பட்டது.