/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபருக்கு மிரட்டல் நால்வருக்கு வலை வாலிபருக்கு மிரட்டல் நால்வருக்கு வலை
வாலிபருக்கு மிரட்டல் நால்வருக்கு வலை
வாலிபருக்கு மிரட்டல் நால்வருக்கு வலை
வாலிபருக்கு மிரட்டல் நால்வருக்கு வலை
ADDED : ஜூலை 25, 2024 06:18 AM
விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே வீட்டிற்குள் நுழைந்து வாலிபரை கத்தியை காட்டி மிரட்டிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்மாபுரம் அடுத்த சு.கீணனுாரை சேர்ந்தவர் பாவாடை மகன் மணிகண்ணன், 38. அதே பகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் பாலாஜி என்பவர் சமீபத்தில் பைக்கில் சென்றபோது, மணிகண்ணன் மகன் ராமச்சந்திரன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் பாலாஜிக்கும், மணிகண்ணனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு மணிகண்ணன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, பாலாஜி, அவரது ஆதரவாளர் அழகுதுரை மகன் சுபாஷ் மற்றும் அடையாளம் தெரியாத இருவரும் சென்று, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
அவரது அலறல் சப்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் வந்ததால், நால்வரும் அங்கிருந்து தப்பியோடினர். மணிகண்ணன் புகாரின் பேரில், கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து, பாலாஜி உட்பட நால்வரையும் தேடி வருகிறார்.