/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பி.எஸ்.என்.எல்., கட்டுப்பாட்டு அறையில் தீ தொலைதொடர்பு சேவை முடங்கியதால் மக்கள் அவதி பி.எஸ்.என்.எல்., கட்டுப்பாட்டு அறையில் தீ தொலைதொடர்பு சேவை முடங்கியதால் மக்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., கட்டுப்பாட்டு அறையில் தீ தொலைதொடர்பு சேவை முடங்கியதால் மக்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., கட்டுப்பாட்டு அறையில் தீ தொலைதொடர்பு சேவை முடங்கியதால் மக்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., கட்டுப்பாட்டு அறையில் தீ தொலைதொடர்பு சேவை முடங்கியதால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 31, 2024 12:00 AM

விருத்தாசலம்:விருத்தாசலம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டதால், தொலை தொடர்பு சேவை முடங்கியது.
விருத்தாசலத்தில், உளுந்துார்பேட்டை சாலையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகாவில் உள்ள தரைவழி மற்றும் செல்போன்களுக்கு தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பகல் 2:00 மணியளவில், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கட்டுப்பாட்டு அறையில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.
இருடப்பினும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த சாதனங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்ததால் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் பி.எஸ்.என்.எல்., தொலைதொடர்பு சேவை முடங்கியதால், வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அறையில் சேதமடைந்த பகுதிகளை பொதுமேலாளர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகிறார். இன்று இரவுக்குள் (நேற்று) தொலை தொடர்பு சாதனங்கள் சீரமைக்கப்பட்டு, சேவை வழங்கப்படும் என்றார்.