ADDED : ஜூன் 10, 2024 01:19 AM
பண்ருட்டி : பண்ருட்டி பஸ்நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் வந்து செல்வதால், பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் அரசு , தனியார், தொலைத்துார பஸ்கள் 200க்கும் மேற்பட்டவை வந்து செல்கின்றன.
பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் தவிர மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கிறது.
இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
எனவே, பஸ் நிலையத்தில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.