/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி குழந்தைகளுக்கான ஆதார் மையம் திறப்பு பள்ளி குழந்தைகளுக்கான ஆதார் மையம் திறப்பு
பள்ளி குழந்தைகளுக்கான ஆதார் மையம் திறப்பு
பள்ளி குழந்தைகளுக்கான ஆதார் மையம் திறப்பு
பள்ளி குழந்தைகளுக்கான ஆதார் மையம் திறப்பு
ADDED : ஜூன் 11, 2024 06:22 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆதார் திருத்த முகாம் துவக்க விழா நடந்தது.
முகாமிற்கு இல்லம் தேடிக்கல்வி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் குணசேகரன், ஆசிரிய பயிற்றுனர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பழமுதிர்சோலை வரவேற்றார். த.வீ.செ. கல்விக்குழும செயலாளர் செந்தில்நாதன் முகாமை துவக்கி வைத்தார்.
இதில் தன்னார்வலர் சிவரஞ்சனி, எல்காட் ஆப்ரேட்டர் தமிழரசன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய விரும்பும் பள்ளி மாணவ மாணவிகள் முகாமில் இலவசமாக ஆதார் திருத்தம் செய்யலாம் என, தெரிவிக்கப்பட் டுள்ளது.