/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., பிரமுகரை வெட்டிய மேலும் ஒருவர் கைது தி.மு.க., பிரமுகரை வெட்டிய மேலும் ஒருவர் கைது
தி.மு.க., பிரமுகரை வெட்டிய மேலும் ஒருவர் கைது
தி.மு.க., பிரமுகரை வெட்டிய மேலும் ஒருவர் கைது
தி.மு.க., பிரமுகரை வெட்டிய மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூலை 28, 2024 06:46 AM
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் சன் பிரைட் பிரகாஷ்,45; கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆதரவாளரான இவர், கடந்த 25ம் தேதி கம்மியம்பேட்டை வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கம்மியம்பேட்டை குப்பை கிடங்கு அருகில் வந்த போது, போதையில் வந்த பில்லாலி தொட்டியைச் சேர்ந்த மணி மகன் சென்னை சூர்யா, 26; நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் ஜெயமூர்த்தி மகன் விக்கி (எ) விக்னேஷ்,26; உட்பட மூன்று பேர் பிரகா ைஷ வழிமறித்து முன்விரோதம் காரணமாக கத்தியால் வெட்டினர். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து சூர்யாவை ஏற்கனவே கைது செய்தனர்.
நேற்று கடலுாரில் சுற்றித் திரிந்த விக்னேைஷ போலீசார் கைது செய்தனர்.