/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி.,செயல்பாடு பாராட்டுக்குரியது; டி.என்.பி.டி.சி., சேர்மன் ராஜேஷ் லக்கானி புகழாரம் என்.எல்.சி.,செயல்பாடு பாராட்டுக்குரியது; டி.என்.பி.டி.சி., சேர்மன் ராஜேஷ் லக்கானி புகழாரம்
என்.எல்.சி.,செயல்பாடு பாராட்டுக்குரியது; டி.என்.பி.டி.சி., சேர்மன் ராஜேஷ் லக்கானி புகழாரம்
என்.எல்.சி.,செயல்பாடு பாராட்டுக்குரியது; டி.என்.பி.டி.சி., சேர்மன் ராஜேஷ் லக்கானி புகழாரம்
என்.எல்.சி.,செயல்பாடு பாராட்டுக்குரியது; டி.என்.பி.டி.சி., சேர்மன் ராஜேஷ் லக்கானி புகழாரம்
ADDED : ஜூலை 24, 2024 06:49 AM

நெய்வேலி,: என்.எல்.சி., நிறுவனம், வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நேற்று முன்தினம் நடத்தியது.
சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். என்.எல்.சி., மின்துறை இயக்குநர் வெங்கடாசலம், நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மான கழக நிதித்துறை இயக்குநர் மலர்விழி முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மின்பகிர்மான கழக நிறுவன (டி.என்.பி.டி.சி) சேர்மன் ராஜேஷ் லக்கானி பேசுகையில், வாடிக்கையாளர் உறவுகளை மேம்படுத்துவதற்காக, என்.எல்.சி., நிறுவனம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்டுகிறேன், என்.எல்.சி., மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் மிகப்பெரிய வாடிக்கையாளராக, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் திகழ்கிறது என்றார்.
கூட்டத்தின் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஒருங்கிணைப்பது, போட்டி விகிதங்களில் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பது குறித்து கலந்துரையாடல் நடந்தது.