/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அதிருப்தி மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அதிருப்தி
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அதிருப்தி
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அதிருப்தி
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அதிருப்தி
ADDED : ஜூலை 24, 2024 07:08 AM

சிதம்பரம் : மின்கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி:
புதிய அரசு, புதிய நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், மொந்தையும் பழசாக இருக்கு, கல்லும் பழசாக இருக்கிறது. தமிழகத்தில் எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பட்ஜெட்டில் உள்ள 62 பக்கங்களில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு என்ற பெயரே இல்லை.
நிதிநிலை அறிக்கையின் குறிக்கோளே, கூட்டணி கட்சிகளான, ஆந்திரா, பீகார் மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு பகிரங்கமாக நிதி ஒதுக்கி, திருப்தி படுத்தப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது செல்வ வரி விதிக்க வலியுறுத்தி வரும் நிலையில், 40 சதவீத வரியை 35 சதவீதமாக குறைத்துள்ளது வருத்தமளிக்கிறது.
மத்திய அரசின் நிர்பந்தத்தின் பேரில் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு 3 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தமிழக அரசுக்கு நல்ல பெயரை தராது. அரசு திரும்ப பெற வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை 25ம் தேதி மா.கம்யூ., சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.