/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணி என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணி
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணி
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணி
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணி
ADDED : ஜூன் 20, 2024 08:59 PM

நெய்வேலி: என்.எல்.சி.,யில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் பேரணியாக சென்று, மனு அளித்தனர்.
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், அதுவரை மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக நேற்று மாலை 6:00 மணியளவில், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 8 ல் இருந்து, ஜீவா நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் தலைமையில், 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்.சி., தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதையடுத்து, ஜீவா தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் மற்றும் தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் 5 பேர் மட்டும் என்.எல்.சி., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு என்.எல்.சி., மனிதவளத்துறை பொது மேலாளர் திருக்குமாரிடம் கோரிக்கை மனுவை வழங்கி விட்டு சென்றனர்.