ADDED : ஜூலை 25, 2024 11:34 PM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியை சேர்ந்த ரமேஷ் என்பவரது கூரை வீடு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்கசிவு காரணமாக எரிந்து சேதமானது.
தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன், ரமேஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, பணம், வேட்டிசேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
வி.சி., மாவட்ட செயலாளர் மணவாளன், தொகுதி துணை செயலாளர் வெற்றிவேந்தன், மாவட்ட பொருளாளர் கங்கை அமரன், பாவலன், வாசுதேவன், வேல்மணி ஆகியோர் உடனிருந்தனர்.