/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு கூட்டம் அரசு பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு கூட்டம்
அரசு பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு கூட்டம்
அரசு பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு கூட்டம்
அரசு பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:34 PM
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதை பொருள் மற்றும் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இளையோர் செஞ்சிலுவை சங்கம், அன்பு சங்கிலி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான போதை பொருள் வழிப்புணர்வு மற்றும் ரத்த தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மேரி கிறிஸ்டினா தலைமை தாங்கினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பரமஜோதி வரவேற்றார். சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் கதிரவன், சிதம்பரம், அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி அரவிந்தன் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிதம்பரம் சப் இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், சக்திவேல் ஆகியோர் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வேல்முருகன் தொகுத்து வழங்கினார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.