மினி டெம்போ மரத்தில் மோதி விபத்து
மினி டெம்போ மரத்தில் மோதி விபத்து
மினி டெம்போ மரத்தில் மோதி விபத்து
ADDED : ஜூன் 16, 2024 10:44 PM

சேத்தியாத்தோப்பு : சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு பழைய பித்தளை பாத்திரங்களை எடுத்து சென்ற மினி டெம்போ புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
சென்னையில் திருவேற்காட்டைச் சேர்ந்த அப்துல்,46; தனது மினி டெம்போ லாரியில் பழைய பித்தளை பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் உருவக்குவதற்காக நேற்று முன்தினம் இரவு 2.00 மணியளவில் புறப்பட்டு வந்துள்ளார்.
மனி டெம்போ சென்னை-கும்பகோணம் சாலையில் பின்னலுார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அதிகாலை 5.30 மணியளவில் சாலையோர புளியமரத்தில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்த போலீசார் அடிபட்டு ஆபத்தான நிலையில் இருந்த அப்துல் மற்றும் உடன் வந்தவரையும் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.