ADDED : ஜூலை 28, 2024 07:16 AM

கடலுார், : கடலுார், புதுவண்டிப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவிலில் 102ம் ஆண்டு சாகை வார்த்தல் மற்றும் செடல் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் செடல் திருவிழா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நேற்று காலை பால் குட ஊர்வலம், ஊஞ்சல் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.