தமிழ்ப்பேரவையின் இலக்கிய சந்திப்பு
தமிழ்ப்பேரவையின் இலக்கிய சந்திப்பு
தமிழ்ப்பேரவையின் இலக்கிய சந்திப்பு
ADDED : ஜூலை 08, 2024 04:40 AM
புவனகிரி: புவனகிரி தமிழ்ப்பேரவையின் 135வது மாத இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் மாதம் தோறும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடந்துவருகிறது. இதில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மொழி நடை மற்றும் ஒலி வேறுபாடு உள்ளிட்ட தன்மைகளை தெரிந்து கொள்கின்றனர். தற்போது 135 வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி பாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை செயலர் கிருஷ்ணன் வரவேற்றார். சங்க இலக்கிய அமுத பகுதியில் குறிஞ்சிப்பாட்டில், 'அன்னாய் வாழி' எனத்தொடங்கும் பாடல் குறித்து புலவர் அன்பகழன் பேசினார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள் அமுதத்தில் 1323 வது குறளான 'புலத்தலின்' எனத்தொடங்கும் பாடல் குறித்து பேராசிரியர் அன்பழகன் பேசினார்.பேரவை பொருளாளர் ஜெகன் நன்றி கூறினர்.