/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பூதவராயன் பேட்டை கோவில் கும்பாபிஷேகம் பூதவராயன் பேட்டை கோவில் கும்பாபிஷேகம்
பூதவராயன் பேட்டை கோவில் கும்பாபிஷேகம்
பூதவராயன் பேட்டை கோவில் கும்பாபிஷேகம்
பூதவராயன் பேட்டை கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 08, 2024 04:40 AM

புவனகிரி: புவனகிரி அடுத்த பூதவராயன் பேட்டை திரவுபதி அம்மன், சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை திரவுபதி அம்மன், சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் விழா துவங்கியது. பகல் 12:30 மணிக்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்தனர். மாலை 6.00 மணிக்கு கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
6ம் தேதி காலை 8.30., மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜைகளும், பின்னர் சுவாமி பிரதிஷ்ட்டை செய்தனர். நேற்று காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியோடு விழா துவங்கி, கோபூஜை உள்ளிட்ட பூஜைகளுக்குப் பின், கடம்புறப்பாடு துவங்கி காலை 8:30 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றபப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.