/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு கம்பம் சேதம் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு கம்பம் சேதம்
ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு கம்பம் சேதம்
ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு கம்பம் சேதம்
ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு கம்பம் சேதம்
ADDED : ஜூன் 03, 2024 05:58 AM

பெண்ணாடம் : பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில், ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள மின் விளக்கு கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பெண்ணாடம் அடுத்த பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேம்பாலம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அதிகப்படியாக பொருட்களை ஏற்றிச் செல்லும்போது, மின் விளக்கு கம்பங்கள் மீது உரசி சென்றன.
இதனால் பல மின் விளக்கு கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்துள்ளன. ஆனால் அவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றவோ, சீரமைக்கவோ இல்லை. இதனால் மேம்பாலம் வழியாக மற்றும் சர்வீஸ் சாலை வழியாகச் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க அச்சமடைகின்றனர்.
எனவே, பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த மின் விளக்கு கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.