ஏரியில் தீ பிடித்து விழல்கள் சேதம்
ஏரியில் தீ பிடித்து விழல்கள் சேதம்
ஏரியில் தீ பிடித்து விழல்கள் சேதம்
ADDED : ஜூன் 12, 2024 01:46 AM
விருத்தாசலம், : கட்டியநல்லுார் எரியில் இருந்த விழல்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரித்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுார் ஏரியில் அதிகளவு விழல்கள் மண்டியுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்த விழல்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சென்ற மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று ஏரியில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.
இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.