குப்பநத்தம் புறவழிச்சாலை 'கந்தல்'
குப்பநத்தம் புறவழிச்சாலை 'கந்தல்'
குப்பநத்தம் புறவழிச்சாலை 'கந்தல்'
ADDED : ஜூன் 04, 2024 06:28 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் குப்பநத்தம் புதிய புறவழிச்சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி வரை புறவழிச்சாலை போடப்பட்டது. இந்த சாலை வழியாக திருச்சி, கடலுார், சேலம் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன.
அதுபோல், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டம் மூலம் உளுந்துார்பேட்டை மார்க்கத்தில் குப்பநத்தம் கிராமத்தில் இருந்து செராமிக் தொழிற்பேட்டை, ஆலடி இணைப்பு சாலை, அரசு பழத்தோட்டம், ஜங்ஷன் சாலை வரை புதிய புறவழிச்சாலை போடப்பட்டது.
இந்நிலையில், குப்பநத்தம் புறவழிச்சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, குப்பநத்தம் புறவழிச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.