/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வைக்கோல் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி வைக்கோல் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
வைக்கோல் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
வைக்கோல் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
வைக்கோல் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 04, 2024 06:25 AM

நெல்லிக்குப்பம், : வைக்கோல் விலை அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் வசதி நன்றாக இருப்பதால் ஆண்டு முழுவதும் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.இங்கு பிரதானமாக நெல், கரும்பு, வாழை பயிர் செய்கின்றனர். தற்போது பல நுாறு ஏக்கரில் சாகுபடி செய்த நெல் அறுவடை நடக்கிறது.
ஒவ்வொரு போகத்திலும் ஒரு கட்டு வைக்கோல் 80 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். தற்போது சேலம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் அங்கு நெல் சாகுபடி குறைந்தது. இதனால் அப்பகுதி கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வியாபாரிகள் அங்கிருந்து லாரிகளில் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வைக்கோல் வாங்குகின்றனர். ஒரு கட்டு 150 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் பண்டல் கட்டு 40 ரூபாய் செலவானாலும் கட்டுக்கு 110 ரூபாய் என கூடுதல் லாபம் கிடைக்கிறது. வைக்கோல் கட்டுகளாக கட்டிய உடன் விற்பனையாவதால் விவசாயிகள் வேலையும் எளிதாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.