/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிள்ளை காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் கிள்ளை காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
கிள்ளை காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
கிள்ளை காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
கிள்ளை காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 01, 2024 06:04 AM
கிள்ளை : கிள்ளையில், விநாயகர், குளூந்தாளம்மன், காளியம்மன் கோவிலில் நாளை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதையொட்டி, கடந்த 30ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும், நேற்று முதல் கால யாக பூஜையும் நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜையும், மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது.
நாளை 2ம் தேதி நான்காம் கால யாக பூஜையும், காலை 9;30 மணியில் இருந்து 11:00 மணிக்குள் அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
3ம் தேதி ஊஞ்சல் உற்சவம், வாண வேடிக்கையும், 4ம் தேதி இன்னிசை கச்சேரி, 5ம் தேதி ராமர் பட்டாபிஷேகம், 6ம் தேதி கபடி தொடர் போட்டி நடக்கிறது.
ஏற்பாடுகளை, கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.