ADDED : ஜூன் 01, 2024 06:03 AM
புவனகிரி : புவனகிரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரில் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
புவனகிரி ஒரு வழி பாதை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த புவனகிரி போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி ,இறந்த மூதாட்டி யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.