/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேசிய குத்துச்சண்டை போட்டி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு தேசிய குத்துச்சண்டை போட்டி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய குத்துச்சண்டை போட்டி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய குத்துச்சண்டை போட்டி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய குத்துச்சண்டை போட்டி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 24, 2024 06:07 AM

ஸ்ரீமுஷ்ணம் : தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றனர். கடலுார் வீரு கிக் பாக்சிங் மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அணியுடன் இணைந்து, தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டனர்.
இதில் 14 முதல் 18 வயதுடைய ஜூனியர் பிரிவில் சுபாஷினி, எழில் பாத்திமா, அக்சயா, நந்தினி, தினேஷ், நவீன்குமார் முதல் பரிசு, பாயிண்ட் பைட் மற்றும் கிக் லைட் போட்டியில் எழில் பாத்திமா, சுபாஷினி, ஆகியோர் இரண்டாம் பரிசு, ஹரீஷ்வரன், முகுந்தன், ஆதிர சகானா மூன்றாம் பரிசு பெற்று சர்வ தேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீமுஷ்ணத்தில் பாராட்டு விழா நடந்தது. கடலுார் மாவட்ட வீரு கிக் பாக்சிங் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியராஜ் வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் பள்ளி தாளாளர் செங்கோல், பி.பி.ஜெ., கல்வி நிறுவனங்களின் தாளாளர் பிரகாஷ் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
கராத்தே மாஸ்டர் ரவிக்குமார் நன்றி கூறினார்.