/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்
ADDED : ஜூன் 24, 2024 06:05 AM

புவனகிரி, : கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் நடந்தது.
ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜாராமலிங்கம் வரவேற்றார். மிராளூர் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, மஞ்சக்கொல்லை ஊராட்சி துணைத் தலைவர் ஜான்சிராணி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் பூவிழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
கூட்டத்தில் கிராமங்களில் கரு கலைப்பு நடக்காமல் பாதுகாப்பது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் இறுதி வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரையும் உயர் கல்வியில் சேர்வதை ஊக்கப்படுத்துவதுடன், மாணவர்கள் இடைநிலை நிறுத்தத்தை முற்றிலும் தடுப்பது.குழந்தை திருமணத்தை தடுப்பது.
மது, கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வது கண்டறிந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.