/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெய்வேலியில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் நெய்வேலியில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
நெய்வேலியில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
நெய்வேலியில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
நெய்வேலியில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 05, 2024 03:29 AM

நெய்வேலி: நெய்வேலியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25 ல் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வட்டம் 21 பகுதியில் ஏழை மக்களுக்கு காலை உணவு , பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார். வடக்குத்து மற்றும் காடம்புலியூர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தலைவர் நன்மாறபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், வடக்குத்து ஊராட்சி துணைத் தலைவர் சடையப்பன், ஒன்றிய செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் ஆனந்த ஜோதி ஏழுமலை, ராம வெங்கடேசன், மற்றும் தி.மு.க., சார்பு அணிகள், தொ.மு.ச., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.