/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம் ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்
ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்
ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்
ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்
ADDED : ஜூன் 16, 2024 10:45 PM

கடலுார் : உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை மற்றும் யூசாக், பிஸ்மார்ட், ஏ.ஜி.பி., பிரிமீயர் குரூப்ஸ் சார்பாக ரத்த தான முகாம் நடந்தது.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் முகாமிற்கு, ஐ.ஆர்.சி.எஸ்., கவுரவ செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார்.
ஸ்டாலின், சரவணகுமார், பாலசுப்ரமணியன், மாரிமுத்து, இளவரசன், சந்திரசேகரன், பாலஅமிர்தராஜ், ஞானமூர்த்தி, அய்யப்பன், நெப்போலியன், கணேஷ், பிரபாகரன் ஆகியோர் ரத்தம் வழங்கினர். இதில், 15 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.
ரத்த வங்கி அதிகாரி டாக்டர் குலோத்துங்கன் சோழன் கலந்து கொண்ட ரத்தம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது, செவிலியர் கீதா, கல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.