/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில் மணல் மாற்றும் பணி தீவிரம் குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில் மணல் மாற்றும் பணி தீவிரம்
குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில் மணல் மாற்றும் பணி தீவிரம்
குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில் மணல் மாற்றும் பணி தீவிரம்
குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில் மணல் மாற்றும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 19, 2024 01:20 AM
கடலுார் : கடலுார் மாநகராட்சிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர், பெண்ணையாறு, திருவந்திபுரம், கேப்பர் மலை ஆகியபகுதிகளில் இருந்து குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்படுகிறது.
இதில் கேப்பர் மலையில் 7 ஆழ்துளை கிணறு மற்றும் திருவந்திபுரத்தில் 6ஆழ்துளை கிணறுகள் மூலமாக குடிநீர் எடுக்கப்படுகிறது.
மலைப்பகுதிகளில் எடுக்கப்படும் குடிநீரில் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்ந்து காவி நிறத்தில் தண்ணீர் வருவதால் அதை அப்படியே பொதுமக்களுக்கு விநியோகிக்க இயலாது.
அதனால், ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை, மணல் நிரப்பப்பட்டுள்ள தொட்டிகளில் விட்டு துாய்மை படுத்திய பின்பே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதற்காக கேப்பர் மலையில் 55 சிமெண்ட தொட்டிகளும், திருவந்திபுரத்தில் 43 தொட்டிகளும் உள்ளன.
இந்த தொட்டிகளில், கசடுகள் தேங்கி காவி நிரமாக மணல் மாறிவிட்டதால், சுத்திகரிப்பு தொட்டியில் புதிய மணல் மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.