/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இண்டியா கூட்டணி நன்றி அறிவிப்பு அதிருப்தியாளர்கள் புறக்கணிப்பு இண்டியா கூட்டணி நன்றி அறிவிப்பு அதிருப்தியாளர்கள் புறக்கணிப்பு
இண்டியா கூட்டணி நன்றி அறிவிப்பு அதிருப்தியாளர்கள் புறக்கணிப்பு
இண்டியா கூட்டணி நன்றி அறிவிப்பு அதிருப்தியாளர்கள் புறக்கணிப்பு
இண்டியா கூட்டணி நன்றி அறிவிப்பு அதிருப்தியாளர்கள் புறக்கணிப்பு
ADDED : ஜூன் 18, 2024 04:34 AM
திட்டக்குடி: கடலுார் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற காங்.,வேட்பாளர் விஷ்ணுபிரசாத், நன்றி தெரிவிக்கும் கூட்டம் திட்டக்குடியில் நடந்தது.
கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். விஷ்ணுபிரசாத் எம்.பி., தனது வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் த.வா.க., தொகுதி பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உரிய அங்கீகாரம் அளிக்காததால் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
அதேபோல் காங்., எஸ்.சி., பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் வீரப்பன், வெண்கரும்பூர் கதிர்வேல், ஆனந்த் உள்ளிட்டோர், விழா பதாகையில் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை படத்தை சிறியதாக போட்டு தொடர்ந்து புறக்கணிப்பதாக கூறி, கூட்டத்திலிருந்து வெளியேறினர்.