ADDED : ஜூன் 30, 2024 05:28 AM
கடலுார் : கடலுாரில், குழந்தையுடன் மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.
கடலுார் அடுத்த ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன், 41; கம்பி பிட்டர் வேலை செய்கிறார். இவரது மனைவி அஞ்சாலாட்சி, 30; இவர்களுக்கு 2 வயதில் அதிதி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, குணசேகரன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கோபத்தில் எங்காவது சென்றிருக்கலாம் என, கூறப்படுகிறது.
இது குறித்து குணசேகரன் கொடுத்த புகாரில், கடலுார் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.