ADDED : ஜூன் 30, 2024 05:29 AM

குள்ளஞ்சாவடி, : குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொறியாளர் நவீனாகுமாரி பங்கேற்றார். ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சுற்றுப்புற சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போதைபொருள் தடுப்பு, விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊராட்சி செயலர் சங்கர், துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.