ADDED : ஜூலை 12, 2024 05:55 AM
கடலுார்: கடலுாரில் மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார் அடுத்த பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி காவியா, 21; திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 4ம் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அன்றைய தினம் செல்வராஜ் வேலைக்கு சென்று, இரவு வீடு திரும்பினார். அப்போது, மனைவியை காணவில்லை.
இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.