/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெடுஞ்சாலை பெயர் பலகையில் பிழை; திருத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை நெடுஞ்சாலை பெயர் பலகையில் பிழை; திருத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெடுஞ்சாலை பெயர் பலகையில் பிழை; திருத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெடுஞ்சாலை பெயர் பலகையில் பிழை; திருத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெடுஞ்சாலை பெயர் பலகையில் பிழை; திருத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2024 10:33 PM

புதுச்சத்திரம் : விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு அருகே பிழையுடன் வைத்துள்ள பெயர் பலகையை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, நெடுஞ்சாலை துறை சார்பில் 6,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதில் ஏராளமான மேம்பாலங்கள், கல்வெர்ட்டுகள், சிறிய இணைப்பு பாலங்கள், கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடங்கும்.
தற்போது சுமார் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து, பல்வேறு மேம்பாலங்களின் கட்டுமான பணி நிறைவடைந்து, அந்த பாலங்கள் வழியாக போக்குவரத்து சென்று வருகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆங்காங்கே, பல்வேறு ஊர் பெயர் மற்றும் அங்கிருந்து அந்த ஊர்களுக்கு எத்தனை கிலோமீட்டர் தொலைவு எனகுறிப்பிட்டு ஆங்காங்கே பெயர் பலகைகள் வைத்துள்ளனர். இதில் ஏராளமான பெயர் பலகைகளில் ஊர் பெயர்கள் பிழையாக உள்ளது.
இதில் புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ஐந்து கண் மதகு பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள, பெயர் பலகையில் புதுச்சத்திரம் என்பதற்கு பதிலாக புடுச்சத்ராம் என பிழையாக பெயர் பலகை வைத்துள்ளனர்.
எனவே பெரியப்பட்டு ஐந்து கண் மதகு பாலம் அருகே, தவறாக வைத்துள்ள பெயர் பலகையை அகற்றி, சரியான பெயருடன் பெயர் பலகை வைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.