ADDED : ஜூன் 16, 2024 10:33 PM

திட்டக்குடி : திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமிற்கு பள்ளி நிறுவனர் கோடி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
பள்ளி முதல்வர் முத்து அய்யாதுரை, நிர்வாக அலுவலர் சித்ரா முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில் 89பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டனர்.