/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் குரூப் 1 தேர்வு: 2,084 பேர் ஆப்சென்ட் சிதம்பரத்தில் குரூப் 1 தேர்வு: 2,084 பேர் ஆப்சென்ட்
சிதம்பரத்தில் குரூப் 1 தேர்வு: 2,084 பேர் ஆப்சென்ட்
சிதம்பரத்தில் குரூப் 1 தேர்வு: 2,084 பேர் ஆப்சென்ட்
சிதம்பரத்தில் குரூப் 1 தேர்வு: 2,084 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜூலை 14, 2024 04:13 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் நடைபெற்ற குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில், தேர்வர்கள் அர்வத்துடன் பங்கேற்று தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் கூட்டுறவு துணை பதிவாளர் ஆகிய ஏழு பதவிகளில், 90 காலியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தகுதித்தேர்வு, நேற்று நடந்தது.
கடலுார் மாவட்டத்தில், சிதம்பரத்தில் 20 மையங்களில் நேற்று தேர்வு நடத்தப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், வீனஸ் மெட்ரிக் பள்ளி, காமராஜ் மெட்ரிக் பள்ளி, ஆறுமுக நாவலர் பள்ளி, சி முட்லூர் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட 20 மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதில் இருந்தும்,6 ஆயிரத்து 62 பேர் விண்ணப்பிருந்த நிலையில், 2 ஆயிரத்து 84 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர்.
வருவாய் துறையினர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைத்து மையங்களிலும் போலீஸ் பாகாப்பு போடப்பட்டிருந்தது.