அரசு கல்லுாரிகளில் நல்ல சூழல் தேவை
அரசு கல்லுாரிகளில் நல்ல சூழல் தேவை
அரசு கல்லுாரிகளில் நல்ல சூழல் தேவை
ADDED : ஜூலை 14, 2024 04:17 AM

கிள்ளை : தனியார் கல்லுாரிகளுக்கு இணையாக, அரசு கல்லுாரிகளில் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரியில், 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. அதுகுறித்து ஆய்வு கூட்டம் கல்லுாரியில் நடந்தது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
மாணவர்கள், மாணவர்களாக இருந்தால்தான் நல்லவர்களாக மாறலாம். இங்கு, விளையாட்டு மைதானத்தில் செடி,கொடிகள் முளைத்துள்ளதால், இங்கு மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தவில்லை என தெரிகிறது. எனவே, மாணவர்கள் விளையாட ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
தனியார் கல்லுாரியைபோல், அரசு கலைக் கல்லுாரியையும் நல்ல சூழலுடன், மாற்ற வேண்டும். கல்லுாரியை பசுமையாக மாற்ற வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்வியில்முன்னேற, பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் சப் கலெக்டர் ராஷ்மி ராணி, தாசில்தார் தனபதி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மனோகர், முத்துப்பெருமாள், கடலுார் மாநகர செயலாளர் ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்நல்லதம்பி, பொதுக்குழு பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இணை பேராசிரியர் டார்லின் குயின் நன்றி கூறினார்.