ADDED : ஜூலை 12, 2024 05:59 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், பொதுவினியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (13ம் தேதி) நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி,விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாசில்தார் அலுவலங்களில், நாளை (13ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 வரையில், பொது வினியோக திட்டம் குறைவு தீர்வு முகாம் நடக்கிறது.
முகாமில் புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்,நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். முகாமில் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
கைரேகை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர், 60 சதவீதம் ஊனமுற்ற மாற்றத்திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்கான சான்று கோரி விண்ணப்பிக்கலாம். நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை அளிக்கலாம்.