/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிள்ளையில் மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல் கிள்ளையில் மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்
கிள்ளையில் மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்
கிள்ளையில் மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்
கிள்ளையில் மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்
ADDED : ஜூன் 05, 2024 11:16 PM
கிள்ளை: கிள்ளையில், நகர தி.மு.க., சார்பில், கருணாநிதி பிறந்த நாளையொட்டி, இருளர் மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
கிள்ளை நகர தி.மு.க., சார்பில், கிள்ளை கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட இருளர் மாணவர்களை, தி.மு.க., நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன், வேன்களில் சிதம்பரம் அழைத்துச்சென்று பிரபலமான துணிக்கடையில், மாணவர்களுக்கு புத்தாடை, உணவகத்தில், பிரியாணி வாங்கிக் கொடுத்தார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர் மணிமாறன், மாணவர்களின் பெற்றோர், கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர்.