ADDED : ஜூன் 05, 2024 11:16 PM
புவனகிரி: பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளையொட்டி, ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புவனகிரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார். வட்டார துணைத் தலைவர் லட்சுமிநரசிம்மன் வள்ளலார் கோவில் வளாகத்தில் நலத்திட்டங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சயில் கட்சி நிர்வாகிகள் நாகராஜன், கோவிந்தசாமி, ஜோதி, ஆறுமுகம், பழனி, ராஜாராமன், பழனி, ராஜேந்திரன், மாறன், ஏழுமலை, திருமூர்த்தி, அம்பலவாணன், சுரேஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சக்திகேந்திரா பொறுப்பாளர் நடராஜன் நன்றி கூறினார்.